என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மகள் தற்கொலை
நீங்கள் தேடியது "மகள் தற்கொலை"
திருச்சி செந்தண்ணீர்புரத்தில் மனைவி, மகளுடன் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். உருக்கமான கடிதம் சிக்கியது.
பொன்மலைப்பட்டி:
திருச்சி செந்தண்ணீர்புரம் பாரி தெரு மூன்றாவது குறுக்கு சந்தில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வந்தவர் பால சகாயராஜ்(வயது 43). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி யுவராணி(40), மகள் முத்துலட்சுமி(25). முத்துலட்சுமி நர்சிங் படித்து வந்தார். இவர்களது வீடு கடந்த 2 நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் இருந்தது.
இந்நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி மாத வாடகை பணம் வாங்குவதற்காக பால சகாயராஜின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததால் பேச முடியவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த விஜயலட்சுமி நேற்று இரவு 7 மணி அளவில் நேரில் வந்து பார்ப்பதற்காக மாடிப்பகுதிக்கு சென்றார். அப்போது துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்தபோது பால சகாயராஜ் தனியாகவும், யுவராணியும், முத்துலட்சுமியும் ஒரே சேலையிலும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். பொன்மலை சரக உதவி போலீஸ் கமிஷனர் பாலமுருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் காவேரி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர். 3 உடல்களும் அழுகிய நிலையில் இருந்ததால் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் உடல்களை கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி பொன்மலை போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பால சகாயராஜ் குடும்பத்தினர் ஒரு மாதத்திற்கு முன்புதான் பாரி தெருவுக்கு குடிவந்து உள்ளனர். அதற்கு முன்பு செந்தண்ணீர்புரம் முத்துமணி டவுன் பகுதியில் குடியிருந்தனர். 3 மாதங்களுக்கு முன்பு பால சகாயராஜின் 17 வயது மகன் நந்தகுமார் உடல் நலக்குறைவினால் திடீர் என இறந்து விட்டார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து விடுபடுவதற்காக தான் வீட்டை மாற்றி புது இடத்திற்கு வந்து உள்ளனர். எனவே மகனின் இறப்பை தாங்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தற்கொலை நடந்த வீட்டில் இருந்து போலீசார் ஒரு கடிதத்தை கைப்பற்றி உள்ளனர். பால சகாயராஜ் கைப்பட எழுதிய அந்த கடிதத்தில் எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நாங்களாகத்தான் இந்த முடிவை எடுத்தோம். யுவராணியின் அக்காள் சுசீலாவிடம் வாங்கிய ரூ.50 ஆயிரம் தொகைக்காக எனது ஆட்டோவை விற்று கடனை அடைத்து விடுங்கள் என்று உருக்கமாக எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் பலரிடம் கடன் வாங்கி இருக்கலாம். கடன் தொல்லை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செந்தண்ணீர்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் நிஷா சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினார்.
குடவாசல் அருகே மகள் தீக்குளித்து இறந்ததால் சீர்வரிசை பொருட்களை திருப்பி கேட்ட மாமனார், மாமியாரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குடவாசல்:
திருவாரூர் மாவட்டம் குடவாசலை அடுத்து கண்டர மாணிக்கத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 32) விவசாயி. இவருக்கும் பிரேமா என்ற பெண்ணும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த பிரேமா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து பிரபு 2-வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த பிரேமாவின் தந்தை சந்திரன், தாய் அமுதா ஆகியோர் கண்டரமாணிக்கம் சென்று தங்களது மகளுக்கு திருமணத்தின் போது கொடுத்த சீர்வரிசை பொருட்களை திருப்பி தரும்படி கேட்டு உள்ளனர். அப்பேது பிரபு அவர்களுடன் தகராறு செய்து இருவரையும் தாக்கி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி சந்திரன் குடவாசல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தார். #tamilnews

×

X